Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏன் பொள்ளாச்சி சம்பவம் பற்றி வாய்திறக்கவில்லை? சமந்தா பதிலால் பலரும் அதிர்ச்சி

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நிலையில், சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த சம்பவம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கவேண்டும் என தமிழ்நாடே பரபரப்பாக இது பற்றி கோபத்துடன் பேசியது. ஆனால் இதுபற்றி ஒருவார்த்தை கூட ஏன் பேசவில்லை என சமந்தாவிடம் கேட்டதற்கு அவர் அளித்துள்ள பதில் இதுதான்..

"அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்கு தெரிந்த அந்த சம்பவம், நான் பேசினால் பல லட்சம் பேருக்கு தெரியும். நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும்" என சமந்தா கூறியுள்ளார்.

இந்த பதில் பலருக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது. உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு இப்படி நடந்திருந்தால் இதே மாதிரி தான் பேசியிருப்பீர்களா என பலரும் கேட்கின்றனர்.