Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழந்தை பெற்றுக்கொள்ள நேரத்தை தேர்வு செய்த நடிகை சமந்தா! ஓபனாக பேசியது - இதற்கும் பிளானா

நடிகை சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வரும் 28 ம் தேதி வெளியாகவுள்ளது.

தெலுங்கில் தன் கணவர் நாக சைதன்யாவுடன் அவர் மீண்டும் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் டீசரில் அவரின் கணவர் வேறொரு நடிகைக்கு லிப்லாக் முத்தம் கொடுத்ததை சகஜமாக எடுத்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பின்னும் நடித்து வரும் சமந்தா அண்மையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான நேரத்தை தேர்ந்தெடுத்துவிட்டேன். அதை இப்போது சொல்ல முடியாது. மேலும் தெரிய வேண்டும் என்றால் நாகசைதன்யாவிடம் கேளுங்கள்.

நான் அம்மாவான பிறகு சினிமாவில் பிரேக் எடுப்பேன். என் குழந்தைதான் எனக்கு உலகமாக இருக்கும். நான் குழந்தையாக இருந்தபோது சில பிரச்சனைகளை சந்தித்தேன்.

அது போல என் குழந்தைக்கும் நடக்க கூடாது. அதனால் கொஞ்சம் பிரேக் எடுப்பேன் என கூறியுள்ளார்.