Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரவில் ஸ்ரீரெட்டியின் ஆடையை பிடித்து இழுத்து ரகளை செய்த நபர்! போலிஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பாலியல் சர்ச்சை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய வீட்டில் புகுந்து ஃபைனான்சியர் சுப்பிரமணியன் சிசிடிவி காமிரா மின் இணைப்பை துண்டித்துவிட்டு ரகளை செய்ததாக ஸ்ரீ ரெட்டி கோயம்பேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களிடத்தில் வீட்டு கண்ணாடிகளை சுப்பிரமணியன் உடைத்ததோடு, தன்னுடைய ஆடைகளை பிடித்து இழுத்து ரகளை செய்ததாகவும் கூறியுள்ளார்.

மதுரவாயல் போலிசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீரெட்டி தான் சுப்பிரமணியை வீட்டிற்கு அழைத்து மது ஊற்றி கொடுத்து, தான் ஜூஸ் குடித்து இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது.

மேலும் ஸ்ரீரெட்டி இருந்த வீட்டிற்கு கடந்த நான்கு மாதங்களாக சுப்பிரமணியன் தான் வாடகை கொடுத்துள்ளாராம். இதனால் போலிசார் ஸ்ரீ ரெட்டியை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

ஆனால் ஸ்ரீரெட்டி சுப்பிரமணியன் தாக்குதல் நடத்தியது உண்மை. நான் அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு போக சொன்னேன். அவரின் மனைவி கெஞ்சி கேட்டதால் நான் சமாதானமாக போவதாக போலிஸில் கூறிவிட்டேன். என் மீது எந்த தவறும் கிடையாது என கூறியுள்ளார்.