Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிக்க வரும்முன் இந்த வேலை தான் செய்தேன்! நடிகை கியாரா அத்வாணி பேச்சால் ரசிகர்கள் ஷாக்

தோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது மனைவி சாட்சியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை கியாரா அத்வாணி. அதன் பிறகு அவர் மகேஷ் பாபுவின் பரத் எனும் நான் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்தார். விரைவில் அவர் தமிழிலும் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிக்க வரும் முன் தான் செய்த வேலை பற்றி கியாரா பேசியுள்ளார். அவரது அம்மா ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். படித்து முடித்ததும் சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினேன். அதோடு சேர்த்து பள்ளியில் ஆசிரியையாகவும் சேர்ந்து பணியாற்றினாராம்.

"ப்ளே ஸ்கூல் என்பதால் 8 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை இருப்பார்கள். அவர்களுக்கு பாடம் நடத்தும் போது ஆடுவேன் பாடுவேன். என் நடிப்பு திறமை வளர்த்துக்கொள்ள அது உதவியது. குழந்தைகளை பார்த்துக்கொள்வது கஷ்டமான வேலை. காலை 6.30 மணி துவங்கி மதியம் பணி முடிவதற்குள் சோர்வடைந்துவிடுவேன். சில சமயங்களில் குழந்தைகளில் டயாபரை கூட மாற்றி விட்டுள்ளேன். வேலை முடிந்து வீடு வந்தால் தூங்கிவிடுவேன். சினிமா வாய்ப்பு தேடி ஆடிஷன் போக கூட எனெர்ஜி இருக்காது."

"அதன் பிறகு 8 மாதங்கள் கழித்து முதல் பட வாய்ப்பு கிடைத்தது. அதனால் பள்ளியில் ராஜினாமா செய்துவிட்டேன்" என கியாரா அத்வாணி கூறியுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.