Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கை, கால் நல்லா தானே இருக்கு- மருத்துவ உதவி கேட்ட நடிகையை மோசமாக விளாசிய நடிகர்

பிரண்ட்ஸ் என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. கன்னட சினிமாவில் நிறைய படங்கள் நடித்த இவர் இப்போது சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நடுவில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின் பணம் இன்றி தவிப்பதாகவும் கூறியிருந்தார், அதோடு கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர் ஒரு உதவி கூட செய்யவில்லை என்றும் வீடியோ வெளியிட்டார்.

இந்த நேரத்தில் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், விஜயலட்சுமிக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்க முடியாது, உடலில் குறையுள்ளவர்கள் கடினமாக உழைத்து வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது நல்ல கை, கால்கள், மனநலம் இருப்பவரால் ஏன் தன்னை பார்த்துக்கொள்ள முடியவில்லை என பேசியுள்ளார்.