Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிளாமரான படங்களுக்கு வரும் ஆபாசமான கருத்துகளுக்கு சமந்தாவின் பதில் இதுதானாம்!

நடிகை சமந்தாவின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது கிளாமரான படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து வரும் ஆபாசமான கருத்துக்களுக்கு சமீபத்திய பேட்டியில் சமந்தா பதில் அளித்துள்ளார்.

அதில், நான் இது போன்ற ஆபாசமான கருத்துகளை அதிகம் கண்டுகொள்வதில்லை. நாம் நல்லதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் குறை சொல்பவர்கள், சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். சிலர் ‘ நீ தமிழ்ப் பொண்ணுதானே, என்ன ஆங்கிலத்தில் பேசி சீன் போடுகிறாய்?” என்று கமெண்ட் போட்டார்கள். எனது குடும்பம் ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பம் என்றோ, வீட்டில் ஆங்கிலத்தில்தான் உரையாடுவோம் என்பதோ கமெண்ட் போட்டவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

நான் வேண்டும் என்றே சீன் போடவில்லை. எனது கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்யும்போது நிறைய டேக் வாங்குவதற்கும் இதுதான் காரணம். இதையெல்லாம் நான் விளக்கிக்கொண்டிருக்க முடியுமா? எல்லோரையும் என்னால் சந்தோஷப்படுத்தமுடியாது என்று கூறினார்.