Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென கணவருடன் போலீசில் சிக்கிய நடிகை நமீதா- ஆனால் கடைசியில்

தமிழ் சினிமாவில் இருக்கும் சில மாச்சான்ஸ்களுக்கு பிடித்த நடிகை நமீதா. இவரை பெயரை சொல்லி புலம்பாத ரசிகனே இல்லை, அந்த அளவிற்கு சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே கலக்கினார்.

பின் பட வாய்ப்புகள் குறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது என பிஸியாக இருந்தார். கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியை தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் சமீபத்தில் தனது நண்பர்களுடன் ஏற்காடு சென்றுள்ளனர். அப்போது தேர்தல் நேரம் என்பதால் போலீசார் அவரின் காரை நிறுத்தி சோதனை செய்ய கேட்டுள்ளனர்.

முதலில் மறுத்த நமீதா பின் வேறு வழியில்லாமல் போலீசாரின் சோதனைக்கு அனுமதித்துள்ளார். அவரின் காரில் அவ்வளவு பணம் மற்றும் நகை எதுவும் இல்லாததால் போலீசார் அவர்களை அனுப்பியுள்ளனர்.