Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.5 கோடி மோசடி செய்த விஜய் பட ஹீரோயின்! அதிர்ச்சி புகார்

விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்திருந்தனர் பாலிவுட் நடிகை அமீஷா படேல். அதன் பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

அமீஷா படேல் தற்போது பண மோசடி புகாரில் சிக்கியுள்ளார். Kuunal Groomer என்பவருடன் சேர்ந்து Desi Magic என்கிற படத்தை தயாரித்துள்ளார் அமீஷா. அதற்காக அவர் அஜய் குமார் சிங் என்பவரிடம் இருந்து 2.5 கோடி ருபாய் கடனாக பெற்றுள்ளார்.

படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் அந்த பணத்தை இன்னும் திருப்பி கொடுக்கவில்லையாம். மேலும் சமீபத்தில் 3 கோடிக்கு அமீஷா கொடுத்த செக் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியுள்ளது.

இதுபற்றி கேட்டதற்கு மிரட்டியுள்ளது அமீஷா தரப்பு. இதனால் தற்போது அமீஷா மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார் அந்த பைனான்சியர்.