Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகை தீபிகா படுகோனே! எதற்காக தெரியுமா

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கும் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வருகிறார், தீபிகா.

இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான பிலிம்பேர் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இதில் தீபிகா படுகோனேவுக்கு பத்மாவதி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படும் என்று ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்ப்பார்த்திருந்தனர்.

ஆனால் சிறந்த நடிகைக்கான விருது ஆலியா பட்டிற்கு தரப்பட்டது. இதனால் தீபிகா படுகோனே மிகுந்த சோகத்தில் உள்ளாராம். மேலும், ரசிகர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகிவிட்டது. இதற்காக என் ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங்கிற்கு அவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.