Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போன் போட்டு சிம்புவிடம் பேசிய நடிகை ஹன்சிகா! இந்த காரணத்திற்காக தானாம்

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம் மஹா. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான சிம்பு கவுரவத் தோற்றத்தில் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சிம்பு எப்படி அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. ஹன்சிகா தான் சிம்புவுக்கு போன் செய்து மஹா படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். ஹன்சிகா கேட்டதும் சிம்பு சரி என்று கூறியுள்ளார். சிம்புவின் கதாபாத்திரம் வெயிட்டானது என்று கூறப்படுகிறது.

முதலில் சில நிமிடங்கள் மட்டுமே வருவதாக இருந்ததாம் சிம்புவின் கதாபாத்திரம். ஆனால் சிம்பு நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் அவரின் கதாபாத்திரம் 30 நிமிடங்கள் வரும் வகையில் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.