Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Soft Porn படம் என கூறுவதா? ஜெயலலிதாவாக நடிக்கவிருக்கும் கங்கனா ரனாவத்தை மிரட்டிய தயாரிப்பாளர்

ஐ லவ் யூ பாஸ் என்ற இந்தி சாப்ட் போர்ன் படத்தின் போட்டோஷூட்டில் உள்ளாடை அணியாமல் வெறும் சாட்டின் ரோபை சுற்றிக் கொண்டு வர வைத்தார் தயாரிப்பாளர் பஹலஜ் நிஹலானி என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பஹலஜ் நிஹலானி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், கங்கனா என்னிடம் விளையாட்டு காட்டக் கூடாது. ஐ லவ் யூ பாஸ் கங்கனா கூறியது போன்று சாப்ட் போர்ன் படம் இல்லை. நான் அந்த புகைப்பட விளம்பரம், மூன்று பாடல்களை ஷூட் செய்ய ரூ. 1.5 கோடி செலவு செய்தேன்.

என் விளம்பரம், என் பட போஸ்டரை வைத்து தான் கங்கனாவுக்கு மகேஷ் பட்டின் கேங்ஸ்டர் என்ற பட வாய்ப்பு கிடைத்தது. அந்த பட வாய்ப்பு கிடைத்தவுடன் என் படத்தில் இருந்து வெளியேறினார். கங்கனாவிடம் 3 படங்களுக்கு கையெழுத்து வாங்கியிருந்தாலும் விலகுவதாக அவர் கேட்டதும் சரி என விட்டுவிட்டேன். அவர் என்னிடம் விளையாட்டுக் காட்டினால், நான் பதிலுக்கு நிறைய விளையாட்டு காட்ட வேண்டி இருக்கும்.

ஐ லவ் யூ பாஸ் படம் அமிதாபச்சன் நடிக்கவிருந்த படம் என கூறியுள்ளார்.