Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிப்பிற்கு முழுக்கு போட்டு திருமணத்திற்கு ரெடியாக திட்டமிட்டுவரும் விஜய்சேதுபதி பட நடிகை!

மெகா ஸ்டார் குடும்பத்தில் இருந்து வந்துள்ள முதல் நடிகை நிஹாரிகா கொனிடெலா. நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள். தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் கோலிவுட் வந்தார்.

அவர் தெலுங்கில் நடித்துள்ள சூர்யகாந்தம் படம் நேற்று ரிலீஸாகியுள்ளது. சூர்யகாந்தம் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தேன். அந்த படத்தில் வரும் பப்ளி கதாபாத்திரம் நிஜத்தில் என் குணத்துடன் ஒத்துப் போகும் என்கிறார் நிஹாரிகா.

நான் இன்னும் சில ஆண்டுகள் நடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு என் தந்தையின் பட தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொள்ள விரும்புகிறேன். படங்களை தயாரிப்பதில் என் தந்தைக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன் என்றும் நிஹாரிகா தெரிவித்துள்ளார்.