Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகைகள் கேவலமா? ஸ்டாலினுக்கு நடிகை ராதிகா சரத்குமார் எதிர்ப்பு

சமீபத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மோடி அழைத்து பேசவே இல்ல. பணக்காரர்களை, நட்சத்திரங்களை அழைத்து பேசினார். கேவலம் நடிகைகளையும் சந்தித்தார்" என பேசியிருந்தார்.

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் இதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"நடிகைகள் பற்றிய உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் குடும்பம் மீது பெரிய மரியாதை உள்ளது. அதை கெடுத்துக்கொள்ள வேண்டாம்" என ராதிகா கூறியுள்ளார்.