Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் குழந்தையை கடலில் தூக்கி போட்டுவிடுவேன்: ஜெயலலிதாவாக நடிக்கும் நடிகை கங்கனா பேட்டி

இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். விரைவில் அவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் நடித்த படங்கள் ஹிட் ஆவது ஒருபுறம் இருந்தாலும், அவரது சர்ச்சை பேச்சு தான் எப்போதும் வைரலாகும். சில வருடங்களுக்கு முன்பு சினிமா துறை பிரபலங்களின் வாரிசுகள் சுலபமாக சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது பற்றி குறை கூறியிருந்தார். அதன் பிறகு தான் Nepotism என்கிற வார்த்தை அதிகம் பிரபலமானது.

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், 'உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து, அவன் 20 வருடம் கழித்து சினிமாவில் நடிக்க அல்லது இயக்க வேண்டும் என ஆசைப்பட்டால் நீங்கள் உதவ மாட்டீர்களா?" என கேட்டதற்கு, "நான் அப்படி செய்தால் அவர் நல்ல இயக்குனராக 50% வாய்ப்பு தான் இருக்கிறது. ஆனால் சிறந்த இயக்குனராக வேண்டும் என்றால் அவரே தான் உழைத்து சாதிக்கவேண்டும். நான் என் குழந்தையை கடலில் தூக்கி போட்டுவிடுவேன். மூழ்குவதும், நீந்தி வெளியில் வருவதும் அவன் கையில் தான் உள்ளது" என கங்கனா கராறாக பேசியுள்ளார்.