Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்யாவுடனான திருமணத்திற்கு பிறகு சாயிஷா நடிக்கும் முதல் படம்! யாருடன் தெரியுமா

ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இருவரும் ஜோடியாக நடித்த கஜினிகாந்த் படத்திலிருந்து காதல் பற்றி கொண்டது. அந்த காதல் தான் தற்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது.

இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்தின்படி சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் இணைந்து ஜோடியாக புதியதாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் என்ற பேச்சு எழுந்தது.

ஆனால் அப்படத்திற்கு முன்னதாக கன்னட டாப் ஹீரோ புனித்ராஜ் குமாருடன் யுவ ரத்னா என்ற படத்தில் சாயிஷா நடிக்கவுள்ளார். இது தான் அவரது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம்.

இப்படத்திற்காக தற்போது பெங்களூர் சென்றுள்ள சாயிஷாவுடன் நடிகை ராதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.