Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனிமேல் நடிக்க வேண்டாம், ஓய்வெடுத்து கொள்ளுங்கள் என கூறிய ரசிகர்- சமந்தாவின் ரியாக்‌ஷன்

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவுடன் கடந்த 2017ல் திருமணம் ஆன பின்பும் கணவரின் முழு ஒத்துழைப்போடு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. விஜய் சேதுபதியுடன் இவர் நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் படம் சமீபத்தில் வெளியானது.

இப்படத்தை பார்த்த பின்பு ரசிகர் ஒருவர் அளவு கடந்த மகிழ்ச்சியில், நீங்கள் இந்த படத்தின் மூலம் உங்களது நடிப்பின் உச்சத்தை தொட்டுவிட்டீர்கள். இத்தோடு போதும் ஓய்வெடுத்து கொள்ளுங்கள் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு தற்போது ரியாக்ட் செய்துள்ள சமந்தா, நீங்கள் என்னை திட்டுக்கிறீர்களா அல்லது புகழ்கிறீர்களா என தெரியவில்லையே என சிரித்தப்படி பதிவிட்டுள்ளார்.