Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இந்திய நடிகை தற்போது Google நிறுவன தலைமை பொறுப்பில்..

நடிகைகளுக்கு சினிமாவில் சில காலம் மட்டுமே வரும் அதன்பிறகு அவர்கள் வேறு தொழில் அல்லது தொழிலதிபரை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். இதுதான் நம் நாட்டில் நடந்துவருகிறது.

ஆனால் பாலிவுட் நடிகை Mayoori Kango சினிமாவில் இருந்து விலகியபிறகு தற்போது படித்து Google India industry head ஆக பணியில் சேர்ந்துள்ளார்.

15 வயதில் நடிக்க துவங்கிய அவர் "Ghar Se Nikalte Hi, Kuch Door Chalte Hi" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துவந்த அவர் 2000க்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு NRI ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு MBA marketing and finance படித்த அவர் வேலை செய்ய துவங்கியுள்ளார்.

குழந்தை பிறந்தபிறகு இந்தியா வந்த அவர் தற்போது Google India industry headஆக பணியில் சேர்ந்துள்ளார்.