Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண் குரலை ஆண் குரலாக மாற்றி பாடக்கூடிய பாடகி இவர் ஒருத்தர் மட்டும் தான்! ஆண்ட்ரியாவை வித்தியாசமாக புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்

பாடகியாக சினிமாவில் அறிமுகமான ஆண்ட்ரியா அதன் பின் ஒரு நடிகையாக பல படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக மாளிகை என்ற படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆண்ட்ரியாவை பயங்கரமாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் கூறுகையில், மாளிகை படத்தின் டீசரைப் பார்க்கும்போது ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பது தெரிகிறது. சினிமாவில் பாடகி, நடிகையாக வலம் வரும் அவர், வழக்கமான கதாநாயகிகளாக இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து துணிச்சலாக நடிக்கிறார். அந்தவகையில், அவரை தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி என்றுதான் சொல்வேன்.

அதோடு, பெண்குரலை ஆண்மைத்தனமாக மாற்றி பாடக்கூடிய திறமை கொண்டவர் ஆண்ட்ரியா. அதுபோன்று தனது குரலை மாற்றி அவர் பாடிய பாடல்களை நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். அப்படி பாடுவதற்கு இப்போது அவர் மட்டும்தான் இருக்கிறார் என்றும் சொன்னார் விஜய் ஆண்டனி.