Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிக்பாஸ் புகழ் இளம் நடிகை! சூப்பர் ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் பின் அத்தனை பேரின் மனங்களை தன் பக்கம் ஈர்த்தது. அதில் கலந்துகொண்ட சிலர் சினிமாவில் அடுத்த கட்டதை அடைந்திருக்கிறார்கள்.

தெலுங்கில் நானி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை பானு ஸ்ரீ. தெலுங்கில் படங்களில் நடித்து வந்தவர் தற்போது தமிழில் அறிமுகமாகவுள்ளாராம்.

இளம் ரசிகர்கள், ரசிகைகள் கவர்ந்த லவ் ஹீரோ ஜெய்க்கு ஜோடியாக தான் நடிக்கவுள்ளார். பிரேக்கிங் நியூஸ் என்ற ஃபேண்டஸி படத்தில் பானு ஜெய்யுடன் ஜோடி சேர்கிறார். இது குறித்து பானு மகிழ்ச்சி தெரிவித்துள்ளாராம்.