Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிப்பிற்கு குட்பை சொல்லும் அனுஷ்கா சர்மா! காரணம் இதுதான்..

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பிறகும் தொடர்ந்து நடித்த அவர் சென்ற வருடம் வந்த ஷாருக்கானின் ஸிரோ படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படத்திலும் அவர் ஒப்பந்தம் ஆகவில்லை.

அதனால் அவர் சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டார் என செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை, அவர் தன் கணவர் கோலிக்காக தான் படங்கள் நடிக்காமல் உள்ளார் என நெருங்கிய வட்டாரம் கூறியுள்ளது.

கோலி தற்போது ஐபிஎல் விளையாடி வருகிறார், அதன் பிறகு உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். அவருக்கு துணையாக இருக்கவே சினிமாவை ஒதுக்கிவைத்துவிட்டு அனுஷ்கா அவருடனேயே உள்ளார்.

உலக கோப்பைக்கு பிறகு அனுஷ்கா மீண்டும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.