Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதில் மட்டும் எப்போதுமே நடிக்கமாட்டேன்.. சாய் பல்லவி அதிரடி பேச்சு

நடிகை சாய்பல்லவிக்கு என்று அதிக ரசிகர்கள் உள்ளனர். மாரி2 ரௌடி பேபி பாடலில் அவரின் நடனத்திற்கு கிடைத்த வரவேற்பு மிக பிரமாண்டமாக இருந்தது.

சாய் பல்லவி ஆரம்பம் முதலே திரைப்படங்களில் சாதாரணமான பெண் போல மேக்கப் அதிகம் போடாமல் நடித்து வருபவர். தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் "நான் எப்போதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருங்கள். மேக்அப் மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது."

"மேக்கப் போட்டால் நான் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என கூறுகிறார்கள். அதனாலேயே நான் படங்களில் மேக்கப் போடுவதில்லை. இயக்குனர்களும் அதை தான் கேட்கிறார்கள்" ஏன் சாய் பல்லவி கூறியுள்ளார்.