Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னதவறு செய்து மன்னிப்பு கேட்காமல் போன நயன்தாரா- கோபப்பட்ட சின்னத்திரை நடிகை

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை நயன்தாரா. நடிகைகளில் இந்த சினிமாவில் இவருக்கு மட்டும் ஒரு தனி மார்க்கெட் உள்ளது.

எப்போது இவர் படங்கள் வந்தாலும் வசூலில் சரியான கலெக்ஷன் பெறும். சமீபத்தில் இவரது நடிப்பில் ஐரா என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தவர் சீரியல் நடிகை செந்தில் குமாரி.

ஒரு பேட்டியில் படம் குறித்து அவர், படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் முடிந்தவர்கள் ஷாட் எடுக்க வாருங்கள் என்று இயக்குனர் கூறினார்.

அப்போது செல்லும் போது ஒருவர் என்னை இடித்துவிட்டு மன்னிப்பு கூட கேட்காமல் வேகமாக சென்றார், உடனே நான் இடித்துவிட்டு மன்னிப்பு கூட கேட்காமல் போகிறார் என்று திட்டினேன்.

உடனே எனது உதவியாளர் அது நயன்தாரா என்றார். பிறகு அய்யய்யோ அவரையா திட்டினேன் என கஷ்டப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.