Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தா நடிப்பு அவ்வளவு மோசமா? பிரபல நடிகை பேச்சால் சமந்தா ரசிகர்கள் கோபம்

ஒரு சில படங்கள் மட்டும் நடித்துவிட்டு காணாமல் போய்விடும் நடிகைகளுக்கு மத்தியில் நடிகை சமந்தா எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தொடர்ந்து முன்னணியில் உள்ளார். சமீபத்தில் அவர் நடித்திருந்த மஜிலி படமும் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் சமந்தா நடித்திருந்த யூ-டர்ன் படத்தின் தமிழ் ரீமேக்கை அரை மணி நேரம் கூட பார்க்கமுடியவில்லை என நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். அந்த கன்னட படத்தில் அவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.

'ரச்சனா ரோலில் வேறு ஒருவரை கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. விரைவில் முழு படத்தையும் பார்க்க முயற்சிக்கிறேன்" என அவர் மேலும் கூறியுள்ளார்.

இது சமந்தா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.