Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது: நடிகை பூனம் கவுர் போலீசில் அதிர்ச்சி புகார்

நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பூனம் கவுர். தெலுங்கு நடிகையான இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இன்று அவர் ஹைதராபாத் போலீசில் ஒரு அதிர்ச்சி புகார் பதிவு செய்துள்ளார். அவரை பற்றி பல யூடியூப் சேனல்களில் மிக மோசமான வகையில் விடீயோக்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் புகார் கூறியுள்ளார்.

"சைபர் கிரைம் போலீசார் இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நடந்தது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. என் வாழ்கையை பற்றி நான் மட்டும் தான் பேசவேண்டும்" என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் பவண் கல்யாண் ரசிகர்கள் மீதுதான் புகார் கொடுத்துள்ளீர்களா என கேட்டதற்கு, ‘இல்லை. போலீஸ் தான் கண்டுபிடிக்கவேண்டும்’ என பதில் அளித்துள்ளார்.

வீடியோ இதோ..