Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கரை மேடையிலேயே தாக்கிய கஸ்தூரி, என்ன இப்படி சொல்லிவிட்டார்!

கஸ்தூரி திடீரென்று இணையத்தில் காலடி எடுத்து வைத்துவிட்டு தினமும் ஒரு கருத்தை பேசி வருகின்றார். அவர் பேசுவது ஒரு சிலருக்கு பிடிக்கவும், சிலருக்கு கோபமும் வருகின்றது.

அந்த வகையில் கஸ்தூரி சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் பாரதிராஜாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இவர் பேசுகையில் ‘தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், ஹீரோயின் மட்டும் வட இந்திய ரியாசென் வேண்டுமா?’ என்று பாரதிராஜாவை தாக்கினார்.

அதை தொடர்ந்து ‘ஷங்கர் ஒரு படி மேலே சென்று வெளிநாட்டு ஹீரோயின் எமி ஜாக்ஸனும், தாவனி அணிய வைத்து, தமிழ்பெண் என்கின்றார்’ என்று ஷங்கரையும் தாக்கி பேசியுள்ளார்.