Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜூலியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்! ஓட்டு போட்டதற்காக இப்படியா?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிகம் பிரபலமானவர் ஜூலி. இவர் அதன்பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று இருந்த பெயரை கெடுத்துக்கொண்டார்.

அதன் பிறகு அவரை சமூக வலைத்தளங்களில் எப்போதும் பலரும் வறுத்தெடுத்து கொண்டே தான் இருக்கின்றனர். அவரது சமூசாக வலைதள பக்கங்களில் அவர்களின் கமெண்டுகள் படுமோசமாக இருக்கும். சில மாதங்கள் முன்பு ஜூலி இவர்களுக்காக ஒரு வீடியோவே வெளியிட்டிருந்தார். ஆனால் யாரும் வசைபாடுவதை நிறுத்துவதாக தெரியவில்லை.

நேற்று நடந்த தேர்தலில் ஜூலி வாக்களித்துவிட்டு ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டார். அதற்கும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். அந்த ட்விட்டிற்கு வந்த கமெண்டுகள் அனைத்தும் அவரை தகாத வார்த்தைகளில் திட்டி தான் வந்திருக்கிறது.