Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மயங்கி விழுந்த 16 வயதான இளம் நடிகை திடீர் மரணம்! ரசிகர்கள் பேரதிர்ச்சி

மிலி இன்பிட்வீன் மற்றும் அல்மோஸ்ட் நெவர் ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த 16 வயதே ஆன நடிகை மியா லெசியா நெய்லர். இவர் நடிகை மட்டும் அல்லாமல் நல்ல பாடகி, டான்ஸரும் கூட.

பெரும் ரசிகர் கூட்டததை கொண்ட மியா கடந்த 7ம் தேதி திடீர் என்று மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரின் திடீர் மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மியா இறந்த செய்தி அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நான் மேலும் புதிய நிகழ்ச்சிகளில் நடிக்கப் போகிறேன் என்று அண்மையில் தான் மகிழ்ச்சியுடன் மியா தெரிவித்திருந்தார். மியா இறந்துவிட்டார் என்பதை பிரபலங்களால் இன்னும் கூட நம்ப முடியவில்லை.