Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன்னுடன் நடித்தால் இறந்து விடுவார்கள்.. நான் ராசியில்லாத நடிகையா? விமர்சனத்தால் கலங்கிய நடிகை

பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் சில குறிப்பிடப்படும்படியான படங்களில் நடித்துள்ளவர் நடிகை பிரியா ஆனந்த். சமீபத்தில் அவர் நடித்திருந்த LKG படம் ஹிட் ஆனது.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பதிவிட்ட ட்விட் தன் மனதை அதிகம் புண்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

"உங்களுடன் நடித்த ஸ்ரீதேவி, LKG படத்தில் நடித்த ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் தற்போது மரணம்அடைந்துவிட்டனர். பிரியா ஆனந்த் ராசி இல்லாதவர்" என ட்விட்டரில் நபர் ஒருவர் பதிவிட்ட ட்விட் தன்னை அதிகம் பாதித்ததாக பதில் அளித்துள்ளார் பிரியா ஆனந்த்.

"வழக்கமாக இப்படிபட்ட நபர்களுக்கு பதில் அளிக்கமாட்டேன். ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.. இது மிகவும் insensitiveவான ஒரு விமர்சனம். சமூகவலைத்தளத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு இப்படி எளிதில் பேசிவிடலாம். ஆனால் உங்களை தரக்குறைவாக பேசப்போவதில்லை" என பிரியா ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

தவறை உணர்ந்த அந்த நபர் பின்னர் மன்னிப்பு கேட்டுள்ளார்.