Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63 படத்தில் இந்த முன்னணி நடிகையா? தகவல் வெளியானதால் விஜய் ரசிகர்கள் குஷி

விஜய்யின் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் தளபதி-63 படத்தை மெர்சல் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் கத்தி படத்திற்கு பிறகு விஜய்யுடன் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது.

நயன்தாரா கதாநாயகியாக நடித்துவரும் இப்படத்தில் பரியேறும் பெருமாள் பட ஹீரோ கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கால்பந்து விளையாட்டை மைய கருத்தாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் மீது பலத்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இந்த விஷயத்தை அறித்து குஷியாகியுள்ளனர்.