Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா 3 பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்! விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அட்டூழியம்

அண்மைகாலமாக நடிகைகள் Me Too ல் பாலியல் புகார் அளித்து வருகிறார்கள். இதில் திரையுலகை சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலர் சிக்கினர். இன்னும் இந்த சம்பவம் தொடர்ந்து வருகிறது.

அண்மையில் வந்துள்ள காஞ்சனா 3 படத்தில் நடித்திருப்பவர் ஜானே கட்டாரியா. ரஷ்யாவை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் எம்.ஆர்.சி நகரில் ஓட்டலில் தங்கி பட வாய்ப்பை தேடி வருகிறார். அவருக்கு வயது 30.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் கட்டாரியா என்பவரை காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். அவருக்கு சமூக வலைதளம் மூலமாக சென்னை மாதவரத்தை சேர்ந்த பிரபல லுங்கி விளம்பர நடிகர் ரூபேஷ் குமார் தொடர்பு கொண்டுள்ளார்.

அவரை விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பின் விளம்பர படங்களில் நடிக்க வைக்க தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என ரூபேஷ் கூற ஜானே அதை மறுத்துள்ளார்.

இதனால் அவன் நடிகையின் புகைப்படங்களை மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி இணையதளத்தில் வெளியிட போவதாக மிரட்ட ஜானே சென்னை போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் விசாரணை மேற்கொண்ட போலிசார் ரூபேஷ் குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.