Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வயதான பாட்டி வேடத்தில் நடிக்கவிருக்கும் லேட்டஸ்ட் இளம் ட்ரெண்டிங் நாயகி!

காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தற்போது நடித்துள்ள படம் பேரழகி.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் ஷில்பா பாட்டி, பேத்தி என இரு வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பிரபலத்திற்கு பிறகு ஷில்பாவின் நடிப்பில் இப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமாக எதிர் நோக்கி உள்ளனர்.