Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த பாத்ரூம் காட்சி தான் எனக்கு பிடிக்கும்! சோனியா அகர்வாலின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்

2000ஆம் கால கட்டங்களில் பிரபலமான நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்தவர் சோனியா அகர்வால். தனுஷுடன் நடித்த காதல் கொண்டேன் படம் தான் இவருக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது என கூறலாம்.

மேலும் இயக்குனர் செல்வராகவனின் ஆஸ்தான ஹீரோயினாக இருந்ததால் அவரது 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்த இவரிடம், புதுப்பேட்டை படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான காட்சி எது? என கேட்டதற்கு, தனுஷிற்கு முதுகு தேய்துவிடும் அந்த பாத்ரூம் காட்சி தான் என ரசிகர்கள் ஷாக்காகும்படி பதிலளித்தார்.

புதுப்பேட்டை படத்தில் அருமையான காட்சிகள் ஏராளம் இருந்தாலும் அந்த பாத்ரூம் காட்சியும் ஓரளவுக்கு நல்ல காட்சி தான் என்று அவரது ரசிகர்களும் மனதை தேற்றி கொண்டனர்.