Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தில் நயன்தாராவிற்கு இப்படி ஒரு கதாபாத்திரமா! மீண்டும் அந்த ரூட்டிற்கு சென்றுவிட்டாரோ?

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக மும்பையில் நடந்து வருகின்றது.

இப்படத்தை படக்குழு அடுத்த வருடம் பொங்கலுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றதாம்.

இந்நிலையில் தர்பார் படத்தின் நயன்தாரா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றாராம், இவர் ரஜினிக்கு ஜோடியா என்று தெரியவில்லை.

ஆனால், ரஜினி-நயன்தாராவிற்கு இடையே செம்ம கலாட்டா காமெடி காட்சிகள் இருக்கின்றதாம், அதிலும் சமீபத்தில் ரஜினி கிரிக்கெட் ஆடுவது போல் சில புகைப்படங்கள் லீக் ஆனது.

இதில் நயன்தாராவும் இருந்தார், நயன்தாரா இப்படத்தில் கல்லூரி ஆசிரியையாக நடிக்கின்றாராம், இதற்கு முன் இவர் ஏகன் படத்தில் இப்படி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகன் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, ஒருவேளை இதிலும் அப்படி ஒரு கல்லூரி ஆசிரியையாக இவர் நடிப்பாரா? என்று ரசிகர்கள் தற்போதே கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.