Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பில் பிரபல நடிகை ராஷ்மிகாவை அழ வைத்த இயக்குனர், இதற்கெல்லாமா, ரொம்ப ஓவர்!

ராஷ்மிகா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் செம்ம கலக்கு கலக்கி வருகின்றார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து அசத்தினார்.

தற்போது இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர் பரசுராம் என்ற இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தாராம், ஒருநாள் படப்பிடிப்பிற்கு இவர் கொஞ்சம் தாமதமாக வந்தாராம்.

இதனால், படப்பிடிப்பில் யாருமே அவருடன் பேசக்கூடாது என பரசுராம் கூறிவிட்டாராம், யாருமே ராஷ்மிகாவுடன் பேசாததால், ஒரு கட்டத்தில் அவர் கண்ணீர் விட்டு அழுதே விட்டாராம்.

பிறகு இயக்குனர் வந்து ‘இன்று சோகமான காட்சிகளை எடுக்க உள்ளோம், அதற்காக யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இப்படி செய்தோம்’ என்று சொன்னாராம்.