Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் காதலர் இவர் இல்லை! யாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திரா விளக்கம்

சில வாரங்கள் முன்பு `யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை நட்சத்திராவின் திருமணம் பற்றி ஒரு செய்தி பரவியது.

அவர் ஹீரோயினாக நடித்த கிடா பூசாரி மகுடி படத்தின் ஹீரோ ராம்தேவ் என்பவரை தான் காதலித்து வருவதாகவும், குடும்பத்தினர் அனுமதியோடு திருமணம் நடக்கிறது என்றும் செய்தி பரவியது.

இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள நட்சத்திரா, "நான் காதலிப்பது உண்மைதான். ஆனால் ஆள் இவரில்லை. அதே படத்தில் வில்லனாக நடித்த தமிழ் என்பவரை தான் காதலிக்கிறேன்" என கூறியுள்ளார்.