Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணீர் விட்டு அழுத சாய் பல்லவி, சமாதானப்படுத்திய இயக்குனர்

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றார்.

இந்நிலையில் NGK ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட சாய் பல்லவி குறித்து சூர்யா மனம் திறந்து பாராட்டினார்.

அந்த வகையில் ‘சாய் பல்லவி மிக திறமையான நடிகர், செல்வா ஓகே சொன்னாலும், அவர் சார் இன்னும் கொஞ்சம் நடிக்கின்றேன் என கூறுவார்.

ஒரு கட்டத்தில் சார் என்னால் தான் அதிக டேக் வருகின்றது, நான் சரியாக நடிக்கிறேனா? என கேட்டு அழ ஆரம்பித்து விடுவார்.

உடனே செல்வா, அவரை அழைத்து சென்று, சமாதானப்படுத்துவார், அந்த அளவிற்கு நடிப்பில் ஆர்வம் உள்ளவர்’ என சூர்யா புகழ்ந்துள்ளார்.