Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போலீஸ் உடையில் செம்ம ஸ்டைலாக ஜோதிகா! புதிய படத்தின் பர்ஸ்ட்லுக், தலைப்பு இதோ

நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவிற்கு சிறுது இடைவெளி விட்ட ஜோதிகா, மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படத்திற்கு பிறகு காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார், ஜோதிகா. இந்நிலையில் இவரது அடுத்த படத்தை சூர்யாவின் 2D Entertainment தயாரிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர்.

மேலும் ஜோதிகாவுடன் ரேகா, யோகிபாபு உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று(ஏப்ரல் 30) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் தயாரிப்பு குழுவிடம் இருந்து தகவல் வெளிவந்தது.

அதன்படி ஜோதிகா புதியதாக நடிக்கவுள்ள படத்திற்கு ஜாக்பாட் என்று தலைப்பும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

Presenting the #JACKPOT duo!👯 Get ready for an action packed fun ride! Coming soon!💃#JackpotFL @Suriya_offl @DirKalyan #Jyotika #Revathi @iYogiBabu #MansoorAliKhan #AnandRaj @anandakumardop @Composer_Vishal@thanga18 @rajsekarpandian @SF2_official @sonymusicsouth pic.twitter.com/1wkksLoANI— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 30, 2019