Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீடு புகார் கூறி ஹீரோவிடம் பணம் பறிக்க முயற்சி! 2 நடிகைகள் கைது

உலக அளவில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது மீடு. பாலிவுட் துவங்கி இந்தியாவின் பல சினிமா துறைகளில் இந்த சர்ச்சை எதிரொலித்தது.

இந்நிலையில் மராத்தி சினிமாவில் நடிகர் சுபாஷ் யாதவ் என்பவர் பற்றி மீடு புகார் கூறி இரண்டு நடிகைகள் சர்ச்சை ஏற்படுத்தினர்.

Rohini Mane மற்றும் Sara Shrawan ஆகிய அந்த இருவரும் தற்போது போலியாக மீடு புகார் கூறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த நடிகரிடம் இருந்து 15 லட்சம் வாங்க திட்டமிட்டுள்ளனர். அவரும் முதலில் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இந்த போலி புகாரில் அந்த நடிகைகளுக்கு உதவியாக இருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.