102 கிலோவில் இருந்து 65 கிலோக்கு மாறிய பிரபல நடிகை! அவரே வெளியிட்டுள்ள புகைப்படத்தை பாருங்கள்
பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி தமிழிலும் அஜித்துடன் அசல், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிசியாக நடித்து வந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து மும்பை தொழிலதிபர் அக்ஷை வர்தே திருமணம் செய்து செட்டில் ஆனார்.
ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் சமீரா ரெட்டி, மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பாகியுள்ளார். மேலும் கர்ப்பமான நேரத்தில் தண்ணீரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கினார்.
இந்நிலையில் தனது 5 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த போஸ்ட்டில் 5 வருடத்திற்கு முன்பு தனது எடை 102 கிலோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.