Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை மும்தாஜ் மரணமா? குடும்ப உறுப்பினர் அளித்த பதில்

70களில் பாலிவுட்டில் ராஜேஷ் கண்ணா, திலீப் குமார், சஞ்சீவ் குமார் உள்ளிட்ட முன்னணி நாயகர்களோடு ஜோடியாக நடித்தவர் மும்தாஜ். நாகின், பிரம்மச்சாரி, ராம் அவுர் ஷ்யாம், கவுரி, கைலோனா உள்ளிட்ட ஏராளமான படங்கள் இன்றும் அவரது புகழைப் பேசுகின்றன.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலவின. ஆனால் தற்போது இதற்கு அவரது குடும்பமே மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மும்தாஜ் குடும்ப உறுப்பினர் ஒருவர் பேசுகையில், மும்தாஜ் உயிரோடு இருக்கிறார். நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இப்படியெல்லாம் ஏன் செய்தி பரப்புகிறார்கள் என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலிலும் இப்படியொரு வதந்தி உலவியபோது மும்தாஜின் இளைய மகள் தான்யா சமூக வலைதளங்களில் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.