Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எமி ஜாக்சனை போன்று திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகை

நடிகை எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் அப்படத்தை தொடர்ந்து சினிமா பக்கம் வராமல் இருந்து அவர் திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியிட்டார். கர்ப்பமான பிறகு தான் அண்மையில் எமி ஜாக்சன் மற்றும் அவரது காதலர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

இப்போது அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்திருந்த புருனா அப்துல்லா கர்ப்பமாக இருக்கிறாராம்.

புருனாவுக்கும் அவரது காதலர் ஆலன் பிரேசர் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கையில் புருனா 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.