Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலான புகைப்பிடிக்கும் போட்டோ பற்றி நடிகை சுனைனா விளக்கம்

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை சுனைனா. அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது அவர் படங்களில் சிறிய வேடங்கள், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுனைனா புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வந்தது. அது பற்றி விளக்கம் கொடுத்துள்ள அவர் "இது High Priestess என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங் சமயத்தில் எடுத்தது. வேலைக்காக தான் நான் இப்படி செய்தேன்" என கூறியுள்ளார்.