Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 நிலவரம் என்ன? ட்ராப்பாகிவிட்டதா? காஜல் அகர்வால் அளித்த பதில்

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படம் என்ன ஆனது என்று தான் ரசிகர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அது பற்றி அடிக்கடி தகவல்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்தியன் 2 பெரிய பட்ஜெட் என்பதால் லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்று கூறப்பட்டது. பின்னர் வேறு சில நிறுவனங்களையும் ஷங்கர் அணுகியுள்ளார் என்றும் செய்திகள் வந்தது.

அதன்பிறகு மீண்டும் லைகா நிறுவனத்துடன் ஷங்கர் பேசிவருவதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள காஜல் அகர்வால்அளித்துள்ள பேட்டியில் இந்தியின் 2 ட்ராப் ஆகவில்லை, ஜூன் மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என கூறியுள்ளார்.

மற்றொருபுறம் தமிழ் சினிமா வட்டாரத்தில் இந்தியன் 2 ட்ராப் ஆகிவிட்டது, ஷங்கர் வேறு படத்திற்கு சென்றுவிட்டார் என்றும் பேச்சு உள்ளது.