Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு! புலம்பும் சீரியல் நடிகை

தற்சமயம் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் ஆரம்ப காலக்கட்டத்தில் சில படங்கள் தோல்வியடைந்துள்ளன. அவ்வாறு மக்களால் அவ்வளவாக கொண்டாடப்படாத படங்களில் ஒன்று தான் ஸ்ரீ.

2002ல் வெளியாகிருந்த இப்படத்தில் சூர்யாவுடன் ஸ்ருதிகா, சீரியல் நடிகை காயத்ரி ஜெயராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் காயத்ரி ஜெயராமன் நத்தினி சீரியலில் பைரவி கேரக்டரின் மூலம் பிரபலமாகி தற்போது அழகு சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ரீ படத்தை பற்றி பேசுகையில், ஸ்ரீ படம் இயக்குனர் எனக்கு சொன்ன கதை வேறு. படமாக்கிய கதை வேறு. சொல்ல போனால் படத்தில் நான் மூன்று, நான்கு காட்சிகளில் மட்டுமே வருவேன். என் சினிமா வாழ்விலேயே இந்த படத்தில் நடித்தது தான் நான் செய்த மிக பெரிய தவறு என்றார்.