Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிப்பு, ஐட்டம் பாடல் புகழ் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனா இது! ஹீரோ இவரா

டிஸ்கோ சாந்தி என்ற இந்த ஒரு பெயர் இன்னும் பலருக்கும் நினைவிருக்கும் தானே. 1980 களில் தொடங்கி பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்.

வெள்ளை மனசு, உதய கீதம் படங்களில் மூலம் நடிக்க தொடங்கியவர் டான்ஸராகவும் பணியாற்றியுள்ளார். மலையாளம், கன்னடம் ஹிந்தி, தெலுங்கு என இவர் நடித்த படங்களின் பட்டியில் மிகப்பெரியது.

1996 ல் கடைசியாக அவர் துறைமுகம் படத்தில் நடித்திருந்தார். பின்னர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளனர்.

இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2013 ல் மாரடைப்பால் ஸ்ரீகாந்த் காலமானார். தற்போது அவரின் மூத்த மகன் மேகன்ஸ் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

லக்‌ஷயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கார்திக், அர்ஜூன் ஆகியோர் இயக்குகிறார்கள்.