Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெருமையை இழந்துவிட்டோம்! தேர்தல் முடிவு குறித்து நடிகை காயத்ரி ரகுராம் கருத்து

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இரண்டிலும் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் அடுத்த 5 வருடங்கள் நாட்டை ஆளவுள்ள பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தமிழகத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் பாஜக அடைந்த தோல்வி குறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம், கோவை மற்றும் கன்னியாகுமரியில் பாஜகவினர் தங்களால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஆனால் அதையும் மீறி பின்னடைவு வருத்தமே. தமிழ்நாட்டில் நாம் பெருமையை இழந்துவிட்டோம் என்றே சொல்ல முடியும். பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் இருவருமே நல்லவர்கள். நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக முன்னிலையில் இருப்பது குறித்து கருத்து பதிவிட்டிருக்கும் அவர், யூகித்ததைப் போல திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி. வாழ்த்துகள். 2021-க்காக அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.