Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் தான் இந்திய பிரதமர், என் கணவர்...! ப்ரியங்கா சோப்ராவின் ஆசைகள்

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்தினார் பிரதமர் நரேந்திர மோடி, இந்நிலையில் பிரியங்கா பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன் கணவர் அமெரிக்காவுக்கு அதிபராக ஆவதற்கும் விரும்புவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், நாங்கள் இருவருமே மாற்றத்தை விரும்புபவர்கள். அதை எங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். எங்கள் இருவருக்கும் இப்போது அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் உயர் பதவிகளில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே இருக்கிறது என்றார்.