Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பற்றி ஒரே வார்த்தையில் நச்சென்று பதில் சொன்ன தளபதி-63 பட நடிகை

தெறி, மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி shroff, கதிர், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் ஜருகண்டி பட நடிகை ரெபா மோனிகா ஜான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய இவர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது ஒரு ரசிகர், தளபதி-63 படத்தில் விஜய்யுடன் நடிக்கிறீர்களா என்று கேட்க, அதற்கு பதிலளித்த ரெபா நடித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யை பற்றியும் தளபதி-63 பற்றியும் கூறுங்கள் என கேட்க கிளாஸ் மற்றும் மாஸ் என்று தெரிவித்துள்ளார்.