Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒதுக்கப்பட்ட பிரபல நடிகை ரோஜாவுக்கு முக்கிய பதவி! முதலமைச்சர் அதிரடி

நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் நடித்து தற்போது முழு நேர அரசியல் வாதியாகிவிட்டார். ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் YSR காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற்றார்.

மேலும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் சபா நாயகர் பதவி தான் கிடைத்தது. ஆனால் ரோஜா அதை நிராகரித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக பொறுப்பு கொடுக்கப்பட்டு நியமனம் செய்து வைத்திருக்கிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.