Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவிம் 90, 2000ஆம் காலக்கட்டங்களில் பிசியான நடிகையாக இருந்தவர் சிம்ரன். பிறகு திருமணம் செய்து செட்டில் ஆன இவர் ரஜினியின் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகியிருந்த பேட்ட படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இவர் 17 வருடங்களுக்கு பிறகு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறாக உருவாகிவரும் ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம் நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடைசியாக 2002ல் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். மணிரத்னம் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.